ஸ்டாக்ஹோம் :
ந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள், சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
உலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் மிகச்சிறப்பாக பணியாற்றி சாதனை
படைத்தவர்களை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்த பரிசை வழங்கி வருகிறது.
மருத்துவத்துக்கான நோபல் பரிசை ஹெபாடைடிஸ்-சி வைரசை கண்டுபிடித்த விஞ்ஞானிகளான ஹார்வே ஜே. ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ், மைக்கேல் ஹாக்டன் ஆகிய மூவருக்கும்.
இயற்பியலுக்கான நோபல் பரிசு ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு ஜென்சல், ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கும்.
வேதியியலுக்கான நோபல் பரிசை இம்மானுவேல் சர்பென்டியர், ஜெனிபர் டவுட்னா ஆகிய இரு பெண் விஞ்ஞானிகளுக்கும்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசை, அமெரிக்க பெண் கவிஞர் லூயிக்லுக்-கிற்கும்.
உலக உணவு அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசையும் நோபல் குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.

இந்தாண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை, ஏல கோட்பாடின் மேம்பாடு , ஏலத்திற்கான வடிவமைப்பு உள்ளிட்ட ஏல முறைகள் குறித்த ஆராய்ச்சிக்காக பொருளாதார நிபுணர்கள் பால் ஆர்.மில்க்ரோம், ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்ட நோபல் பரிசளிப்பு குழு இதுகுறித்து அதிகாரபூர்வமாக தெரிவிப்பதற்காக மில்க்ரோமை அவரது அதிகாரபூர்வ தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.


இதுகுறித்து தகவலறிந்த சக ஆராய்ச்சியாளரும் அண்டை வீட்டுக்காரருமான ராபர்ட் வில்சன் இரவு 2:15 மணியளவில் மில்க்ரோம் வீட்டுக்கதவை தட்டினார், பின் அவர் வீட்டில் இருந்த பாதுகாப்பு கருவி மூலம் தொடர்பு கொண்டு தகவலை கூறினார்.
தனக்கு நோபல் பரிசு கிடைத்தது குறித்து வில்சன் கூறியதை ஆச்சர்யத்துடன் கேட்ட மில்க்ரோம், அதே நேரத்தில், இந்த அகால வேளையில் தன் வீட்டு கதவு தட்டப்படுவதை பாதுகாப்பு கேமரா மூலம் பார்த்த மில்க்ரோமின் மனைவி, மிகுந்த சந்தோஷம் அடைந்தார்.
நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளர்களின் இந்த உரையாடல் அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.