நடிகை ராதிகா சரத்குமாரின் வாணி ராணி, சித்தி 2, பாக்கியலட்சுமி தொடர் என பிரபலமான சீரியல்களில் நடித்து, ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை நேஹா மேனன்.

சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனால் தான் உருவ கேலிக்கு உள்ளாகியதை மிகவும் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய பிறகுதான் உருவ கேலி என்கிற விஷயம் எனக்குத் தெரிய வந்தது. ஒவ்வொரு கமென்ட்டை பார்க்கும்போதும் ஆரம்பத்தில் மிகவும் வேதனை அடைந்தேன்.

நம்மைப் பற்றி கமெண்ட் செய்பவர்களுக்கு நாம் எதனால் எடை போட்டோம், அதனால் என்னென்ன பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறோம் என்பதெல்லாம் தெரியாது.

ஏதாவது நெகட்டிவ் கமெண்டுகளை பார்த்தால், அவர்களுடைய கணக்கை பிளாக் செய்துவிடுவேன். அதுபோல கிட்டத்தட்ட 8000 கணக்குகளை பிளாக் செய்திருக்கிறேன். மெசேஜுகளை பார்த்து விட்டு அத்தனையையும் அழித்துவிடுவேன். இப்படி செய்தால் தான் எனக்கு நிம்மதியாக இருக்கும். அந்த அளவிற்கு மனஅழுத்தத்திற்கு சென்றேன். இதிலிருந்து மீண்டு வர ஒரு வருடம் ஆனது என கூறியுள்ளார் .

https://www.instagram.com/p/CRyqUJsBpwj/