டில்லி:

நாடு முழுவதும் இன்று மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான கட்ஆப் மதிப்பெண்ணும் குறைந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அத்துடன் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ நுழைவு தேர்வை 13 லட்சம் மாணவ மாணவிகள் எழுதியிருந்தனர்.தமிழகத்தை சேர்நத 1லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நீட் தேர்வை எழுதியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று வெளியான தேர்வு முடிவின்படி, இந்த ஆண்டு மருத்துவ  படிப்பிற்கான கட்ஆப் மார்க் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது.

பொதுப்பிரிவினருக்கான கப்ஆப் 119 முதல் 691 வரை (மொத்தம் 720).

அதுபோல  எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மாணவ மாணவிகளுக்கு கட்ஆப் மதிப்பெண்,  96 முதல்  118 வரை வரையறுக்கப்பட்டுள்ளது.

பொது பிரிவில்  உள்ள  மாற்றுத்திறனாளிகளுக்கான  கட்-ஆஃப் 107-118 ஆகும்.

அதேபோல, எஸ்சி, எஸ்டி மற்றுஙம ஓபிசி பிரிவுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான  கட்ஆப் 96 முதல்106 என்ற விகிதம் குறைந்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு மருத்துவ படிப்பில் பொதுப்பிரிவிற்கான கட்  மதிப்பெண் 131 முதல் 720 வரை இருந்தது.  ஓ.பி.சி. மற்றும் எஸ்.சி. / எஸ்.டி. பிரிவுகளுக்கு, 107-க்கும் குறைவாக இருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான கட்ஆப் 118 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.