சென்னை:
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் உள்ள 3,500 மையங்களில் நடக்க உள்ள தேர்வில் 18.72 லட்சம் பேர் பங்கேற்க உளள்னர்.
தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உட்பட, 13 மொழிகளில் நடக்க உள்ள இந்த தேர்வை, தமிழகத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 15 ஆயிரம் பேர் உட்பட, 1.50 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்
பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 வரை தேர்வு நடக்க உள்ள தேர்வுக்கு பகல் 1:30 மணிக்கு பின் யாரும் தேர்வு மையத்துக்குள் வர அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தேர்வில், 720 மதிப்பெண்ணுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் தொடர்பாக, 200 கேள்விகள் கேட்கப்படும். சரியான பதிலுக்கு, 4 மதிப்பெண் வழங்கப்படும். தவறான ஒவ்வொரு விடைக்கும், 1 மதிப்பெண் கழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.