மதுரை:

ருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து, கல்லூரியில் சேர்ந்தது தொடர்பான  விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் சிலருக்கு உயர்நீதி மன்றம் மதுரை, ஜாமின் வழங்கி உள்ள நிலையில், இன்று மேலும் 2 மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஜாமீன் வழங்கி  உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் ஆள் மாறாட்டம் தொடர்பான வழக்கில், சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவரின் மகன்  உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர்  வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவரது தந்தை டேவிட் ஆகிய 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனுவில் ஏற்கனவே உதித்சூர்யா மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று  மற்றவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனுமீது இன்று விசாரணை நடைபெற்றது.

வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சுவாமிநாதன்,  மாணவர்களான பிரவீன், ராகுல் எதிர்காலம் கருதி அவர் களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. மாணவர்கள் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் அல்ல என்றவர், 2 மாணவர்களின் தந்தைகளான சரவணன், டேவிட் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.