டில்லி
முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.
தற்போது நாடெங்கும் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலமே நடைபெற்று வருகிறது. இதில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி அன்று கொரோனா பாதுகாப்பு விதிகளுடன் நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார். இந்த தேர்வு ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதாக இருந்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு 11 மொழிகளில் நடைபெற உள்ளது. அவை ஆங்கிலம், இந்தி, அச்சாமிய மொழி, வங்க மொழி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, ஒரியா, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகள் ஆகும்.