சென்னை: நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவது குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக அரசு, தமிழக மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு மசோதா நிறைவேற்றி மத்தியஅரசிடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கு இதுவரை மத்தியஅரசு அனுமதி வழங்கவில்லை. இதுகுறித்து, சட்டப்பேரவை கூட்டத்தொடரில், பேரவை விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நீட் தேர்வு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில், காலை 10:30 மணியளவில் அனைத்து கட்சி கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நடைபெறவுள்ள உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள 13 அரசியல் கட்சிகளைச் சேர்ந்தர சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.