மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய கேரள நபர்  ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு 24ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பலர் ஆள்மாறாட்டம் செய்துள்ள கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, கேரள மாநிலத்தைச்சேர்ந்த ரஷீத் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டடார்.

இந்த நிலையில், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என   ரஷீத்  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  அவர் தாக்கல் செய்த மனுவில், ” நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பல மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில்,  எனது பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்ததாக 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டாலும் உறுதியாக ஆள்மாறாட்டம் செய்தவர்கள் யார் என்பது இதுவரை  கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், நான் ஜாமின்கோரி  தேனி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தேன். எனது  மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துதுள்ளது., எனவே உயர்நீதிமன்றத்தில் தற்போது ஜாமின் கோரியுள்ளது.  தனக்கு ஜாமீன் அளிக்கும் பட்சத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறேன்  என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை நீதிபதி முரளி சங்கர் விசாரணை நடத்தினார். தொடர்ந்து,, வழக்கை பிப்ரவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.