அலகாபாத் : தன்னுடைய நீட் விடைத்தாள் கிழிந்துவிட்டதாகவும் இதனால், தனக்கான தேர்வு முடிவு முறையாக அறிவிக்கப்படவில்லை என்றும் மாணவி ஆயுஷி படேல்  எஙனபவர் வீடியோ வெளியிட்டிருந்தார். இது வைரலானது. மேலும், அவரது தரப்பில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, ஆயுஷி பட்டேல் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளநிலை மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வான நீட் நுழைவு தேர்வு   மே 5-ம் தேதி  நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இதை 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் ஜுன் 4ந்தேதி வெளியானது. ஆனால்,   தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த நிலையில்,  அதற்கு பதிலாக 10 நாட்களுக்கு முன்னதாக ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. அதைத்தொடர்ந்து வெளியான தேர்வு முடிவுகளிலும் பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டது. இதனால் தேர்வு முடிவுகள்  சர்ச்சையை கிளப்பியது. தேர்வு முடிவில்,  67 மாணவர்கள் 720 மதிப்பெண்கள் பெற்று சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  மேலும் ஏராளமான  மாணவர்கள் 718, 719 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர், இது நீட் மதிப்பெண் திட்டத்தின் படி சாத்தியமற்றது. இதுமட்டுமின்றி ஏராளமான NEET-UG 2024 முதலிடம் பெற்றவர்கள் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இதுவும் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.

இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல மாணவர்கள் தரப்பில் மாநில உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், மாணவி ஆயுஷி படேல்  என்பவர், தனது விடைத்தாள் கிழிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மதிப்பெண் குறைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டிருந்ததார். இந்த வீடியோ வைரலாது. இந்த வீடியோவை, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தன்னுடைய பக்கத்திலும் பகிர்ந்தார். இதனால் மேலும் வைரலாது. அத்துடன் மாணவி தரப்பில் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

அவரது மனுவுடன்,  தனது ஆவணங்களை இணைத்த அவர், தன்னுடைய விடைத்தாளை கணினி மூலம் இல்லாமல் கைப்பட திருத்த வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக் கவிசரித்த உயர்நீதிமன்றம்,  இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய தேர்வு முகமை தரப்பில், மாணவி ஆயுஷி படேல்  விடைத் தாள் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில், அம்மாணவியின் விடைத் தாள் எந்த சேதாரமும் இல்லாமல் அப்படியே இருந்துள்ளது.

இதையடுத்து அம்மாணவி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்பது தெரியவந்தது. வேண்டுமென்றே தேசிய தேர்வு முகமை மீது குற்றம் சாட்டி பரபரப்பு வீடியோ வெளியிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மாணவியை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம், அந்த மாணவி மீது தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியது. இதையடுத்து, தனது தவறுக்கு மன்னிப்பு கோரிய ஆயுஷி பட்டேல் தரப்பு,   மனுவை திரும்பப் பெறுவதாக  நீதிபதியிடம் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

இப்போது பாஜக பிரியங்கா மீது குற்றச்சாட்டி வருகிறது.  போலித்தனத்தை ஊக்குவிப்பதாக அவர்மீது பாஜக  குற்றம் சாட்டியுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், ஆயுஷிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க  என்டிஏ முடிவு செய்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள்,  உண்மையாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் புகார்களின் நியாயத்தன்மையின் மீது ஒரு  சந்தேக நிழலை  ஏற்படுத்தி உள்ளது.

நீட் விவகாரத்தில், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருவதாகவும், மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஆயுஷி பட்டேலின் வீடியோ  பொய்யானது உண்மைக்கு புறம்பானது  என்பது மக்களுக்கு  தெரிய வந்துள்ளது.