டில்லி

நீட் மற்றும் ஜெ இ இ தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் நடக்கும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் அறிவித்துள்ளார்..

மருத்துவக் கல்லூரி படிப்புக்கான நீட் தேர்வு,  மற்றும் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புக்களுக்கான ஜே இ இ தேர்வுகள் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன.   இந்த தேர்வுகளை எழுத 15 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.   முதலில் மே மாதம் இந்த தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தன

பல மாநிலங்களில் ஊரடங்கு முழுமையாகத் தளர்த்தப்படாத நிலையில் இந்த தேர்வுகளுக்கான அட்டவணைகள் இருமுறை வெளியாகி இரு முறையும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.   இந்த தேர்வு எழுத இருந்த மாணவர்களின் பெற்றோர்கள் கொரோனா அச்சம் காரணமாக இந்த தேர்வுகளை மேலும் ஒத்தி வைக்க வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் இன்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஜே இ இ  பொதுத் தேர்வுகள் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.  நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13 அன்றும் ஜே இ இ அட்வான்ஸ்ட் தேர்வுகள் வரும் செப்டம்பர் 2 அன்று நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.