இந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வு மதிப்பெண்களுக்கான கட்ஆப் குறைய வாய்ப்பிருப்பதாக பிரபல கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு கடந்த 6ந்தேதி பல்வேறு சர்ச்சைகளுக்குள் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு மதிப்பெண் கட்ஆப் கடந்த ஆண்டைஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைய வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து பிரபல நீட் தேர்வு பயிற்சி மைய நிறுவனர்கள் கூறியதாவது,
பிரபல இணையதள கல்வி நிறுவனமான டாப்பர் டாட் காம் நிர்வாகியான ராஜசேகர் ராட்ரே கூறியதாவது,
இந்த ஆண்டு நீட் தேர்வில் இயற்பியல் வினாத்தாளாது கடந்தை ஆண்டை விட அதிக கேள்விகளுடன் சற்று கடினமாகவும் காணப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களுக்கு அதிக நேரமும் தேவைப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் இந்த ஆண்டு கட்ஆப் குறைய வாய்ப்பிருப்பதாக கூறி உள்ளார்.
அதாவது, பொது பிரிவினருக்கு 120 முதல் 130 வரை, ஒபிசிக்கு 97 முதல் 107 வரை, 92 – 102 மற்றும் எஸ்.டி. பிரிவு 92 முதல் 102 வரை என்ற அளவிற்குள் கட்ஆப் மார்க் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறி உள்ளார்.
பேஸ் அகாடமி நிறுவன தலைவர் ஒய்.கே.ஜெயராமப்பா கூறியதாவது,
இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இயற்பியல் சற்று கடினமாக இருந்ததுடன், உயிரியல் வினாத்தாளும் சிந்தனையை தூண்டுவதாக இருந்தது என்று கூறி உள்ளார். இதன் காரணமாக எஸ்டி, எஸ்டி இட ஒதுக்கீடு 95-100 இடையில் இருக்கும் என்றும், பொதுப்பிரிவினருக்கு 125 முதல் 130 வரைக்குள் கட்ஆப் மதிப்பெண் இருக்கலாம் என்றும் கூறி உள்ளார்.
உதய்நாத் மிஸ்ரா, பேஸ்பர்ஸ்ட் நிறுவனத்தின் தலைமை கல்வி அதிகாரி கூறும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வை எதிர்கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது காரணமாகவும், வினாத்தாள் காரணமாகவும் இந்த ஆண்டு கட்ஆப் 130 முதல் 140 வரை இருக்கும் என்று கருதுவதாக தெரிவித்துள்ளார்.
பிரபல கல்வியாளர்களின் கூற்றுப்படி இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான மதிப்பெண் குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.