ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘டிக் டாக்’ புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இத்திரைப்படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் அருண் குமார்.

மேலும் விஜய் டிவி தங்கதுரை, கொட்டாச்சி, நெல்லை சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காட்சிக்கு காட்சி உச்சகட்ட கவர்ச்சியில் தோன்றியுள்ளார் டிக் டாக் இலக்கியா. அடல்ட் ஹாரர் ஜானரில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது படக்குழு.

[youtube-feed feed=1]