புதுடெல்லி:
வருவாய் குறைந்து, செலவினம் அதிகரித்திருப்பதால் தொடர்ந்து நடத்த முடியாது நிலை ஏற்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய தொலை தொடர்புத் துறைக்கு பிஎஸ்என்எல் நிறுவன கார்பரேட் பட்ஜெட் மற்றும் வங்கிப் பிரிவு மூத்த பொதுமேலாளர் புரன் சந்திரா அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த டிசம்பர் இறுதியில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.90 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஊழியர்கள் சம்பளம் ரூ.850 கோடி மற்றும் தொழில் ரீதியான நிலுவைத் தொகை ரூ.13 ஆயிரம் கோடியும் நிலுவையில் உள்ளன.
மாத வருவாய் மற்றும் செலவினத்துக்கு இடையே இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த இடைவெளியை உடனடியாக குறைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அரசின் ஆலோசனைக்காக காத்திருக்கின்றோம் என்று கூறியுள்ளார்.