பிரேசிலியா: பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 82,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. அந்நாட்டில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் உச்சத்தில் இருக்கிறது.

இந் நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 4,195 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 3,37,364 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 82,869 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,106,058 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 11,558,784 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

[youtube-feed feed=1]