புதுடெல்லி:

2012-2018 வரை 2 கோடி ஆண்கள் வேலை இழந்துள்ளதாக தேசிய மாதிரி சர்வே (என்எஸ்எஸ்ஓ) அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2017-18 ம் ஆண்டில் மட்டும் 28.6 கோடி பேர் மட்டுமே வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
நகர்ப்புறத்தில் வேலை இல்லாத ஆண்களின் விகிதம் 7.1 சதவீதமாகவும், கிராமப்புற ஆண்கள் விகிதம் 5.8 சதவீதமாகவும் உள்ளது என என்எஸ்எஸ்ஓ சர்வேயிங் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வே தேசிய புள்ளியியல் ஆணையகத்தின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. எனினும், இந்த அறிக்கையை மக்கள் மத்தியில் வெளியிட மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது.

2011-12 மற்றும் 2017-18-ல் 3 கோடி தற்காலிக பண்ணைத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இந்த புள்ளிவிவரங்களை மறைக்க முயற்சிக்கும் மோடி அரசுக்கு எதிராக உலகம் முழுவதும் இருந்து 108 பொருளாதார நிபுணர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.