டெல்லி: தமிழகத்தில் நீதிமன்றங்களில் 17,27,956 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
இதுபற்றிய தகவலை மத்திய சட்டத்துறை ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: நாடு முழுவதிலும் உள்ள உயர்நீதிமன்றங்களில் செப்டம்பர் 16ம் தேதி வரை மொத்தம் 51 லட்சத்து 52 ஆயிரத்து 921 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவற்றில் 36, 77, 89 சிபில் வழக்குகள், 14,75, 832 கிரிமினல் வழக்குகள் ஆகும்.சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் 5,70, 282 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் 5, 11, 362 சிவில் வழக்குகள், 51,136 கிரிமினல் வழக்குகள் அடங்கும்.
நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் கீழ் நீதிமன்றங்களில் இம்மாதம் 16ம் தேதி வரை 3 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரத்து 68 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் 94,49,268 சிவில் வழக்குகள் மற்றும் 2 கோடியே 50 லட்சத்து 23 ஆயிரத்து 800 கிரிமினல் வழக்குகள் அடங்கும்.
தமிழகத்தில் உள்ள மாவட்ட மற்றும் கீழ் நீதிமன்றங்களில் 11 லட்சத்து 57 ஆயிரத்து 674 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் 6 லட்சத்து 53 ஆயிரத்து 793 வழக்குகள் சிவில் வழக்குகள் ஆகும் மேலும் 5 லட்சத்து 3881 வழக்குகள் கிரிமினல் வழக்குகள் ஆகும் என்று கூறி உள்ளார்.