கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை ஜஃமீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி திரும்பப் பெற்றது.

இதனால், ஏற்கனவே மைனாரிட்டி அரசாக செயல்பட்டு வந்த லிபரல் அரசாங்கம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது.

கனடா நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் NDP கட்சியின் இந்த முடிவு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான ஆளும் லிபரல் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் நாடாளுமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்றவும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் இருந்து தப்பிக்கவும், பிற கட்சிகளின் ஆதரவை நாடும் நிலைக்கு ஜஸ்டின் ட்ரூடோ தள்ளப்பட்டுள்ளார்.

புதிய ஜனநாயகக் கட்சித் தலைவரான ஜஃமீத் சிங்-கை கன்சர்வேட்டிவ் கட்சி நிர்வாகிகள் அண்மையில் சந்தித்து பேசிய நிலையில் கனடா அரசியலில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பொருளாதார மந்த நிலை மற்றும் சிக்கன நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2025ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு இல்லை என்றும் கன்சர்வேட்டிவ் கட்சியே வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துக் கணிப்புகள் கூறும் நிலையில் NDP கட்சியின் இந்த முடிவு கனடா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.