புதுடெல்லி:

தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலானதையடுத்து, டெல்லி பெட்ரோல் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் பேனரை புதுடெல்லி மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.


இந்தியாவில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களின் 56 ஆயிரம் பெட்ரோல் நிலைய டீலர்கள் உள்ளனர்.

பிரதமரின் இலவச காஸ் சிலிண்டர் திட்டம் குறித்த விளம்பரம் பிரதமர் மோடியின் படத்துடன் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் அமைக்கப்பட்டிருந்தது.

தேர்தல் அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிமுறை அமலானதும், புதுடெல்லி மாநகராட்சி நிர்வாகம் ஒரு பெட்ரோல் நிலையத்தில் பிரதமர் மோடி பேனரை அகற்றியது.

மற்ற பெட்ரோல் நிலையங்களில் இன்று இரவுக்கும் பிரதமர் மோடியின் பேனரை அகற்றவேண்டும் என வாட்ஸ் அப் மூலம் புதுடெல்லி மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

புதுடெல்லி மாநகராட்சி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.