டெல்லி: மோடி தலைமையிலான பலவீனமான கூட்டணி அரசு உயிர்வாழ போராடும் என்று கூறிய ராகுல் காந்தி, அவரது ஆதரவாளர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
2014-ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக பெரும்பான்மையை இழந்தது இதுவே முதல் முறை. கூட்டணி கட்சிகளான TDP மற்றும் JD(U) உதவியுடன் ஆட்சி அமைத்தது. பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. 240 இடங்களை பெற்றுள்ள பாஜக சார்பில், பிரதமராக மோடி 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, மோடி அரசு 5 ஆண்டு நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பலவீனமான கூட்டணி அரசு உயிர் வாழ போராடும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் விமர்சித்து உள்ளர். செய்திதாள் நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ராகுல், மோடி தலைமையிலான அரசு எளிதாக உடையக்கூடியது. எண்கள் மிகவும் உடையக்கூடியவை, மேலும் சிறிய இடையூறு அரசாங்கத்தை வீழ்த்தலாம். சிறிய இடையூறு ஏற்பட்டால் கூட அரசு கவிழ்ந்துவிடும். பிரதமர் மோடி தலைமையிலான பலவீனமான கூட்டணி அரசு உயிர்வாழ போராடும்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான அடக்குமுறைகள் நிகழாமல் நியாயமான முறையில் தேர்தல் நடந்திருந்தால், இண்டியா கூட்டணி எந்த சந்தேகமும் இன்றி பெரும்பான்மையை வென்றிருக்கும் என்று கூறியது, தற்போது மோடி தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளவர்கள், மற்றும் அங்கு அதிருப்தியில் உள்ளவர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என்றார்.
இதன் காரணமாக, அந்த கூட்டணியில் சிறிய குழப்பம் ஏற்பட்டால் கூட மத்தியில் உள்ள தே.ஜ., கூட்டணி அரசுக்கு ஆபத்துதான் என்றவர், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக, மக்களிடையே வெறுப்பையும், கோபத்தையும் பரப்பி, அதன் மூலம் பலனைப் பெறலாம் என நினைத்தது. ஆனால், அது நிறைவேறவில்லை மக்கள் மதம் மற்றும் வெறுப்பு அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர்.
“நீங்கள் வெறுப்பைப் பரப்பலாம், கோபத்தைப் பரப்பலாம், அதன் பலனை நீங்கள் அறுவடை செய்யலாம் இந்தத் தேர்தலில் இந்திய மக்கள் அதை நிராகரித்துவிட்டனர்,” என்று அவர் கூறினார்.
“நியாயமான சூழ்நிலை இருந்திருந்தார், எதிர்க்கட்சியான இந்திய கூட்டணி “எந்த சந்தேகமும் இல்லாமல்” பெரும்பான்மையை வென்றிருக்கும் என்று கூறிய ராகுல், “நாங்கள் எங்கள் கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டிக்கொண்டு போராடினோம்… இந்திய மக்கள், ஏழைகள், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சரியாகத் தெரியும்,” என்று அவர் கூறினார்.