டெல்லி: நடிகர் சுஷாந்த் வழக்கில் ஷ்ரத்தா கபூர், சாரா அலி கானுக்கு போலீசார் விரைவில் நோட்டீஸ் அனுப்ப உள்ளனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ஜூன் மாதம் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து போனார். அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்துள்ளன.

பல கோணங்களில் சிபிஐ, போதை தடுப்பு போலீசார், அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு தொடர்பாக ரியா சக்ரபர்த்தி கரபோர்த்து, சாமுவேல் மிராண்டா உள்ளிட்டோரை போதை தடுப்பு போலீசார் கைது செய்து உள்ளனர்.

இந் நிலையில், சுஷாந்த் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் விசாரிக்க சாரா அலிகான், ஷ்ரத்தா கபூருக்கு போதை தடுப்பு போலீசார் நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, கேதார்நாத் என்ற படத்தில் சுஷாந்த், சாரா ஜோடி நடித்த போது, இருவருக்குமான நட்பு பற்றி சில தகவல்களை நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]