கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.
இருவரும் வெளிப்படையாக காதலை வெளி உலகுக்கு சொல்லவில்லை என்றாலும் சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் உள்ளிட்டவற்றை புகைப்படங்களாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி தனி விமானத்தில் கேரளா சென்றுள்ளனர். அந்தப் படங்களை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார் விக்கி. வரும் 14-ம் தேதி கேரளாவில் விஷு சிறப்பாகக் கொண்டாடப்படும். அதற்காகத் தான் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தற்போது கேரளா சென்றுள்ளனர்.