கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.

இருவரும் வெளிப்படையாக காதலை வெளி உலகுக்கு சொல்லவில்லை என்றாலும் சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் உள்ளிட்டவற்றை புகைப்படங்களாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஈஸ்டர் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விக்னேஷ் சிவன், ஈஸ்டர் நாள் மகிழ்ச்சியான நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CNRGJA6hFLB/