நடிகை நயன்தாராவும், அவரது காதலர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து தயாரித்துள்ள படம் ‘கோலங்கள்’
அறிமுக இயக்குநர் விநோத் ராஜ் டைரக்டு செய்துள்ள இந்த படம் நெதர்லாந்தில் நடைபெறும் ‘ரோட்டராம்’ உலகப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஜோடியாக கலந்து கொண்டனர்.
புதுப்பெண் போல் நயன்தாரா மஞ்சள் வண்ண பட்டுப்புடவையில் ஜொலிக்க, புது மாப்பிள்ளை போல் விக்னேஷ் சிவன், வெள்ளை வேட்டியில் காட்சி அளித்தார்.
படக்குழுவினருடன் அங்கு எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன், தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
“இந்த படம் நிச்சயம் பரிசு பெறும் என நம்புகிறேன்” என விக்னேஷ் பதிவிட்டுள்ளார்.
– பா. பாரதி