நயன்தாரா முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடித்துக் கொண்டே, நாயகி மையப் படங்களிலும் நடிக்கிறார். தீபாவளிக்கு ரஜினியுடன் அவர் நடித்த அண்ணாத்த வெளியாகிறது.

இந்நிலையில் தமிழில் மேலும் ஒரு படத்தில் நயன்தாரா நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோகன் ராஜாவின் சந்தோஷ் சுப்பிரமணியம், சிம்புதேவனின் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படங்களில் உதவி இயக்குனராக இருந்து போட்டா போட்டி படத்தின் மூலம் இயக்குனரானவர் யுவராஜ் தயாளன்.

வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி படங்களையும் இவர்தான் இயக்கினார். இவரது இயக்கத்தில் நயன்தாரா நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரலாம்.