நயன்தாராவின் பிறந்தநாளை கோலகலமாகக் கொண்டாடியிருக்கிறார் விக்னேஷ் சிவன். இதில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரும் கலந்துக் கொண்டுள்ளனர்.
இன்று தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
Nayan, லேடி சூப்பர் ஸ்டார் என்று எழுதப்பட்ட இரண்டு கேக்குளை வெட்டியிருக்கிறார் நயன்தாரா. Happy Birthday Mol என பர்த்டே பலூனிலும் கேக்கிலும் இயக்குநர் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டு இருந்தார்.
வழக்கமாக தங்கமே என நயன்தாராவை குறிப்பிடும் விக்கி, இந்த முறை கண்மணி, தங்கமே மற்றும் எனக்கு எல்லாமே எனக் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.