நாயன்மார்கள் வரலாறு – பகுதி 3

நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத் தொகையில் அறுபத்து இரண்டு நாயன்மார்களைப் பற்றிக் கூறியுள்ளார்.

அதன் பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்து இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் இணைத்து அறுபத்து மூவரின் வரலாற்றைத் திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முதல் இரு பகுதிகளில் முதல் 32 நாயன்மார் குறித்துக் கண்டோம்.  இன்று அடுத்த 16 நாயன்மார்களைக் குறித்து காண்போம்.

  1. சாக்கியர்:

அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.

  1. சிறப்புலி:

சிவனடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

35.சிறுத்தொண்டர்:

பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.

  1. சேரமான்பெருமாள்:

சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரைச் சிவனாகப் பாவித்து உபசரித்தார்.

  1. கணநாதர்:

சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார்.

38.கூற்றுவர்:

நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

  1. புகழ்ச்சோழநாயனார்:

எறிபத்தர். தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர்.சிவனடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.

  1. நரசிங்கமுனையரையர்:

சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். மூர்த்தி வேடம் கொண்ட சிவனாடியரை கண்ட பல பதுங்கி செல்ல அவரை வணங்கி நீதி அளித்தார்.

  1. அதிபத்தர்:

வலையில் கிடைக்கும் முதல் மீனைச் சிவனை நினைத்து, ஆற்றில் விடுபவர்.  அன்று ஒருபொன் மீன் கிடைத்தாலும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

  1. கலிக்கம்பர்:

முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்த மனைவியின் கையை வெட்டியவர்.

  1. கலியர்:

வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசியில்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.

  1. சத்தி:

சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

  1. ஐயடிகள்காடவர்கோன்:

மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

  1. கணம்புல்லர்:

விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்

  1. காரி:

காரிக்கோவை என்ற நூல் இயற்றி வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.

  1. நின்றசீர்நெடுமாறனார்:

திருஞான சம்பந்தரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.