ராய்ப்பூர்:

சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 6 பேர் பலியாயினர்.

தண்டவட்டா மாவட்டத்தில் ஷோல்னார் கிராமம் அருகே பாதுகாப்பு படையினர் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிடருந்தனர். அப்போது புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடி பொருள் வெடித்தது. இதில் 6 வீரர்கள் பலியாயினர். ஒருவர் காயமடைந்தார்.

இது குறித்து நக்சல் ஒழிப்பு டி.ஐ.ஜி., சுந்தர்ராஜ் கூறுகையில், ‘‘இந்த தாக்குதலில் 6 பேர் இறந்துள்ளனர். நக்சல்களை தேடும் பணியில் கூடுதல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாக்குதல் நடந்த பகுதியில் வீரர்களிடம் இருந்து நவீன துப்பாக்கிகளை நக்சல்கள் எடுத்து சென்றுள்ளனர்’’ என்றார்.

புகைப்படம் உதவி ஏஎன்ஐ: நன்றி