
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜயின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் இந்த ‘தளபதி 65 ‘ படத்தில் பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
விடிவி கணேஷ், யோகி பாபு, குக் வித் கோமாளி போட்டியாளர் புகழ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர். தளபதி 65 படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். விஜயுடன் 3வது முறையாக அனிருத் பணியாற்ற உள்ளார். கேஜிஎப் படத்தில் பணியாற்றிய அன்பறிவு இரட்டையர்கள் ஸ்டன்ட் அமைக்க உள்ளனர்.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில், படத்தின் இயக்குனர் நெல்சன், லொகேஷன் தேடுவதற்காக ரஷ்யா சென்றுள்ளார். அதோடு ரஷ்யாவில் எடுக்கப்பட்ட படங்களையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் நெல்சன்.
இதில் வில்லனாக நவாசுதீன் சித்திக் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக விசாரித்தபோது, “இன்னும் வில்லன் யார் என்பது முடிவாகவில்லை. வில்லனாக யாரெல்லாம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பரிசீலனை செய்தார்களோ, அந்தப் பட்டியலில் நவாசுதீன் சித்திக்கின் பெயரே இல்லை. அனைத்தும் ஒப்பந்தமாக முடிவானவுடன் முறையாக அறிவிப்பு வரும்” என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
[youtube-feed feed=1]