பனாஜி:

விமான பயிற்சியின்போது, மிக்-29கே ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தின்போது, அந்த விமானத்தில் பயணம் செய்தி இரண்டு விமானிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.

கோவா மாநிலத்தில் உள்பட கடற்படை தளம் அருகே பயிற்சி விமானிகள் 2 பேர்,  மிக்-29கே ரக போர் விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விமான தளத்தில் இருந்து புறப்பட்ட, விமானம் சிறிது தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானிகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக விமானத்துறை தெரிவித்து உள்ளது.