மதுரை:
மீனாட்சி அம்மன் கோவிலில் 26 முதல் நவராத்திரி விழா துவங்க உள்ளது.
வரும் 26ல் துவங்கும் நவராத்திரி விழா அக்டோபர் 5-ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.
உற்சவ நாட்களில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மன், மூலஸ்தான சன்னதியில் திரைபோட்டு அபிஷேகம், அலங்காரமாகி கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை போன்ற விசேஷ பூஜைகள் நடைபெறும்.
ஒன்பது நாட்களும் விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படும்.உற்சவ நாட்களில் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.