பூமியியல் மனித செயல்பாடு குறையும்போது வெளியேற்றப்படும் கார்பன் அளவு வீழ்ச்சியடையும், அதன் இறுதி இலக்கு அரசியலாக இருக்கும். கொரோனா வைரஸால் உண்டான சுற்றுச்சூழல் மாற்றங்கள் முதலில் விண்வெளியில் இருந்து நமக்கு தெரிந்தன. பின்னர், நோய் மற்றும் ஊரடங்கும்  தொடர்ந்தபோது, அதன் விளைவுகள் நம் தலைக்கு மேலே வானத்திலும், நம் சுவாசத்திலும் ஏன் நம் கால்களுக்குக் கீழே தரையிலும் கூட உணரப்பட்டது. வுஹானில் ஆரம்பித்த முதல் நபரில் இருந்து உலகளாவிய பரவலான வரை, இதுவரை 5.35 மில்லியன் மக்களை பாதித்து, 350,000 பேரை பலிக் கொண்டுள்ளது. கொரோனாவின் விளைவு மனிதர்களில் கொடூரமாக இருந்தாலும், அது இயற்கைக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. தற்போதுதான் இயற்கை இயற்கையாக உள்ளது. நம்மால் எளிதாக சுவாசிக்க முடிகிறது. மோட்டார் வாகனப் போக்குவரத்து, தொழிற்சாலைகள் நிறுத்தப்பட்டதால் நகரங்களில் காற்று மாசுபாட்டை அதிகரிக்க செய்து வந்த காரணிகள் முற்றிலுமாக குறைந்துவிட்டன. முதலில் சீனா, பின்னர் இத்தாலி, இப்போது இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் டஜன் கணக்கான நாடுகள், காற்றில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவற்றின் அளவு 40% அளவுக்கு வீழ்ச்சியடைந்ததின் பலனை அனுபவித்து வருகின்றன. காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால், ஆஸ்துமா, மாரடைப்பு மற்றும் நுரையீரல் நோய்களின் அபாயங்கள் குறைந்துள்ளது.

பல நிபுணர்களுக்கு, புதைபடிவ எரிபொருள்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு பார்வை இருந்து வருகிறது. ஆனால், தற்போதைய நெருக்கடியில் இருந்து மனிதகுலம் ஆரோக்கியமான, தூய்மையான உலகமாக வெளிவரக்கூடும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு. இந்த நம்பிக்கை வைரஸின் தாக்கம் மிகக் குறுகிய காலத்திற்கானது என்பதால் அல்ல. இதைப் பின்பற்றி தொலைநோக்கு அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை சார்ந்தது. பல ஆண்டுகளாக அதிகரித்து வந்த பல்வேறு அழுத்தங்களுக்கு இடையே, திடீரென மனிதனின் கால்தடம் பூமியில் ஒளிரத்துவங்கியுள்ளது.  கடந்த ஆண்டு இதே நேரத்துடன் ஒப்பிடும்போது, விமான போக்குவரத்து பாதியாக குறைந்துள்ளது. இங்கிலாந்தில் சாலை போக்குவரத்து 70% க்கும் அதிகமாக குறைந்திருக்கிறது. குறைவான மனித நடமாட்டத்துடன் இந்த பூமி உண்மையில் அமைதியடைந்துள்ளது. தொற்றுநோய்க்கு முன்பை விட “கலாச்சாரம்” சார்ந்த பிரச்சனைகள் பெருமளவில் குறைந்துள்ளன.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக சீராக மோசமடைந்து வந்த முக்கிய சுற்றுச்சூழல் காரணிகள் மேம்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய கார்பன் ஆதாரமான சீனாவில், பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து மார்ச் நடுப்பகுதி வரை, கார்பன் வெளியேற்றம் சுமார் 18% குறைந்துள்ளது. – இது 250 மெ.டன்னுக்கு சமம் ஆகும். இது இங்கிலாந்தின் ஆண்டு உற்பத்தியில் பாதிக்கும் மேலானது. இந்த நெருக்கடி நேரத்தில், ஐரோப்பாவின் கார்பன் வெளியேற்றம் சுமார் 390 மெ. டன்கள் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் குறிப்பிடத்தக்க சரிவை எதிர்ப்பார்க்கலாம். கார்பன் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமான பயணிகள் வாகன போக்குவரத்து குறைந்துள்ளதால், அதன் கார்பன் அளவு கிட்டத்தட்ட 40% குறைந்துள்ளது. ஊரடங்கு கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டவுடன், இந்த நிலை மாறலாம் என்றாலும், 2008-2009 நிதி நெருக்கடிக்கு பிறகு, நமது பூமி கார்பன் வெளியேற்ற அளவுச் சரிவை முதன்முதலில் எதிர்கொள்கிறது.

மரபு சார்ந்த புதைபடிவ எரிபொருள்கள்
இந்த ஊரடங்கு மரபு சார்ந்த புதைபடிவ எரிபொருள் தொழிற்துறையை மோசமாக பாதித்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. முற்றிலுமாக முடங்கியுள்ள சாலை மற்றும் விமான போக்குவரத்தினால், எண்ணெய் விலை கடந்த ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு சரிந்துள்ளது. மார்ச் மாதத்தில் மோட்டார் வாகனப் போக்குவரத்து 83% குறைந்ததால், கார் விற்பனை 44% சரிந்தது. மக்கள் அனைவரும் இணையவழி தகவல் தொடர்புக்கு மாறியுள்ளனர். இங்கிலாந்தில் உள்ள ஆட்டோமொபைல் அசோசியேஷனின் தலைவர் புதிய சாலைகளை உருவாக்குவதிலிருந்து மாறி, வலுவான இணைய அலைவரிசையை விரிவுபடுத்துவதற்கு உள்கட்டமைப்பு முதலீட்டை மாற்றுமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினார். இது இயற்கைக்கு ஒரு நல்ல செய்தியாகும், ஏனென்றால் பூமியை வெப்பமாக்கும் மற்றும் வானிலை அமைப்புகளை சீர்குலைக்கும் கார்பன் வெளியேற்றத்திற்கு மிகப்பெரிய காரணமாக எண்ணெய் உள்ளது. சில ஆய்வாளர்கள், தற்போதைய இந்த வீழ்ச்சி, கார்பன் வெளியேற்றத்தின் சரிவு மற்றும் எண்ணெயின் சகாப்தத்தின் முடிவுக்கான தொடக்கமாகவும் இது இருக்கும் என்று நம்புகின்றனர். கடந்த நூற்றாண்டில் நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்திய மற்றும் நமது வளிமண்டலத்தை மாசுபடுத்திய எரிபொருளைப் பற்றி அவர்கள் கடுமையாக எச்சரிக்கிறார்கள்.

“உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தில் ஏற்பட்டிருக்கும் குறைவு இதற்கு முன் நாம் கண்டிராதது” என்று குளோபல் கார்பன் திட்டத்தின் தலைவர் ராப் ஜாக்சன் கூறினார். “காற்று மாசுபாடு பெரும்பாலான பகுதிகளில் சரிந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க மரபு சாரா எரிபொருள்களால் நம் காற்றை எவ்வளவு விரைவாக சுத்தம் செய்ய முடியும் என்பதற்கான ஒரு கண்ணோட்டத்தை கொரோனா வைரஸ் நமக்கு வழங்கியுள்ளது”. ஆனால், மனித வள இழப்பு மிக அதிகம் என்றும் சுற்றுச்சூழல் சார்ந்த இந்த ஆதாயங்கள் தற்காலிகமானது என்றும் அவர் எச்சரித்தார். “பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை இழக்க நேரிடும். எனவே, கார்பன் வெளியேற்றத்தின் குறைவை கொண்டாட முடியவில்லை. நமது எரிசக்தி உள்கட்டமைப்பில் முறையான மாற்றம் தேவை. இல்லாவிடில், கார்பன் வெளியேற்றம் மீண்டும் ஏற்றம் பெறும்.” என்றும் கூறினார். தொற்றுநோய் ஒரு தூய்மையான உலகத்திற்கான மாற்றத்தை துரிதப்படுத்தும் என்ற நம்பிக்கைகள், அரசியல் ரீதியாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் இதுதான் நடக்கிறது. எண்ணெய் நிறுவன நிர்வாகிகள் டொனால்ட் டிரம்பை வற்புறுத்தி தங்களது காரியங்களை சாதித்துக் கொண்டுள்ளனர். இந்த நெருக்கடியை சாக்காக வைத்து, திரை மறைவின் கீழ், வெள்ளை மாளிகை மூலம், கார் தொழிலுக்கான எரிபொருள்-பொருளாதார தரக் கட்டுபாடுகளை திரும்ப பெற்றுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் சுற்றுச்சூழல் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தியுள்ளது. மூன்று மாநிலங்கள் புதைபடிவ எரிபொருள் எதிர்ப்பாளர்களை குற்றவாளிகளாக அறிவித்துள்ளன. மேலும், எக்ஸ்எல் எண்ணெய் குழாய்  கட்டுமானம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் பெரிய பொருளாதார ஊக்க மசோதாவில் விமான நிறுவனங்களுக்கு 50 பில்லியன் டாலர்கள் வழங்கக் கூறப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் குழுக்கள் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை அவ்வாறு செய்ய வேண்டாம் என்று வலியுறுத்துகின்றன. வழக்கம்போல வணிகத்திற்கு நோக்குடன் பொருளாதாரத்தை விரைவுப்படுத்தும் காரியங்கள் முதன்மைப் பெற்றால், சுற்றுச்சூழல் ஆதாயங்கள் தற்காலிகமாகவோ அல்லது தலைகீழாகவோ இருக்கும். சீனா எதிர்பார்ப்பது குறித்து சில குறிப்புகளை வழங்குகிறது. உதாரணமாக, வுஹானில் புதிய நோய்த்தொற்று எதுவும் உறுதிப்படுத்தாததால், ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மார்ச் மாத இறுதியில் இருந்து எரிசக்தி பயன்பாடு அதிகரித்து, காற்று மீண்டும் மாசடையத் துவங்கியுள்ளது.
வனவிலங்கு மற்றும் பல்லுயிர்
ஆயினும்கூட, மனித இனம் ஊரடங்கில் வீட்டுக்குள் இருக்க, வன விலங்குகள் அந்த வெற்றிடத்தை நிரப்பின. முன்போல் இல்லாமல், சாலை விபத்தில் இறக்கும் விலங்குகளின் எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்துள்ளது. இங்கிலாந்தில் மட்டும், ஆண்டுதோறும் சுமார்,  100,000 முள்ளெலிகள், 30,000 மான், 50,000 பேட்ஜர்கள் மற்றும் 100,000 நரிகள், அத்துடன் களஞ்சிய ஆந்தைகள் மற்றும் பல சாலையில் வாகன விபத்தில் சிக்கி உயிரிழப்பது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பறவை மற்றும் பூச்சி இனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சாலைப் பணியாளர்கள் சாலையோர புற்களை வெட்டாமல் விட்டதினால், காட்டுப்பூக்கள் அதிகமாக பூத்து அதிக தேனீக்களை ஈர்த்துள்ளன. இதனால் அதிக மகரந்த சேர்க்கை நடந்துள்ளது. சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கோல்டன் கேட் பாலத்தில் கொயோட்ட்கள் பார்க்கப்பட்டன. வெள்ளை மாளிகையில் இருந்து சில மைல் தொலைவில் வாஷிங்டன் வீடுகளுக்கு அருகில் மான்கள் மேய்ந்து கொண்டிருக்கிறது. இத்தாலியின் பார்சிலோனா மற்றும் பெர்கமோவில் காட்டுப்பன்றி தைரியமாக உலா வருகிறது. வேல்ஸில், மயில்கள், லாண்டுட்னோவில் ஆடுகள்  என பல பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய சோகம் நகைச்சுவையாக ஆக்கப்பட்டு வருகிறது. உலா வரும் விலங்குகள் மனிதரகளை பூட்டப்பட்ட ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பதாக நகைசுவையுடன் வழங்கப்பட்டு வருகிறது. சிலர், மனித சகாப்தம் முடிவுக்கு வருவதன் ஆரம்பம் என்று கூட சிலர் பேசுகின்றனர். தற்போதைய எந்திரமயமாக்கப்பட்ட உலகில் நாம் காணும் இயற்கை மீட்பு என்பது மிகக் குறைவு. அதே சமயம் பூமியின் தெற்கு பகுதியில், குறிப்பாக வன விலங்குகள் அதிக ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், பூமியின் தெற்கு உலகின் அரிய வகை விலங்குகளின் வாழிடமாக உள்ளது. ஆனால் கொரோனா காரணமாக பொருளாதார நெருக்கடி மற்றும் மனித வளப்பற்றாக்குறை நிலவுவதால் அவற்றை சரியாக பராமரிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அமேசான் மழைக்காடுகளில், சுற்றுச்சூழல் அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மசாய் மாரா மற்றும் செரெங்கேட்டியில், இயற்கை வள பாதுகாவலர்கள் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா வருவாயையே பெறுகின்றனர். அதாவது ரேஞ்சர்களுக்கு கூட பணம் செலுத்த அவர்கள் சிரமப்படுகிறார்கள். இது சட்டவிரோத வேட்டையாடுதல், சுரங்கம் மற்றும் பல சட்ட விரோத செயல்களுக்கான வாய்ப்பாக இருக்கும் என்று அஞ்சப்படுயகிறது. குறிப்பாக இப்போது உள்ளூர் மக்கள் வருமானத்தை இழந்து வருகிறார்கள், மேலும் அவர்களது குடும்பங்களுக்கு உணவளிக்க புதிய வழிகள் தேவைப்படுகின்றன. “குறுகிய காலத்தில் பொருளாதார நடவடிக்கைகளில் சரிவு இயற்கைக்கு ஒரு நன்மை என்று நினைப்பது ஆபத்தானது” என்று விலங்குகள் மற்றும் ஃப்ளோரா இன்டர்நேஷனலின் மாட் வால்போல் கூறினார். “இதில் குறிப்பிடத்தக்க அபாயங்கள் உள்ளன.” தற்போதைய முடக்கம் இயற்கை வளங்களுக்கான தேவையை குறைக்கிறது, ஆனால் உலக மக்கள் தொகையில் பாதி வீட்டில் தனிப்பட்டிருக்கும்போது அவர்களின் பசியும் குறைகிறதா என்பதை பார்க்க வேண்டும்
புதிய எதிர்காலம்?
இயற்கைக்கு கிடைத்திருக்கும் இந்த ஆய்ப்பினை விட, பின்வருவது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். பொதுமக்கள் வீட்டில் முடங்கியிருந்தபோது, ஏற்கனவே இது மூடிய கூட்டங்களில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உலகளாவிய மாநாடுகள், அதாவது இந்த ஆண்டு இறுதியில் கிளாஸ்கோவில் திட்டமிடப்பட்ட கோப்26 ஐ.நா. காலநிலை பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஐ.நா. தலைவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆர்வலர்கள் குறைந்தபட்ச அவசர பொது விவாதத்திற்கு மட்டுமாவது அழைப்பு விடுக்க அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால் பசுமை மீட்பு வேலைகள், தூய்மையான ஆற்றல், கட்டிட செயல்திறன், இயற்கை உள்கட்டமைப்பு மற்றும் உலகளாவிய பொதுநலங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த முடியும். “இது ஒரு பெரிய அரசியல் யுத்தம்” என்று ஐரோப்பிய காலநிலை அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியும் பாரிஸ் ஒப்பந்தத்தின் கட்டிடக் கலைஞருமான லாரன்ஸ் டூபியானா கூறினார். முன்னணி விஞ்ஞானிகள் கூட்டாக சேர்ந்தது அரசுகள் வழக்கம் போல் வணிகத்திற்குள் நுழைவதை விட, பசுமை மற்றும் பசுமை மீட்புப் பாதையில் செல்ல மீட்ட்பு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று வெளிப்படையான வேண்டுகோள் வைத்து கையெழுத்திட்டுள்ளனர்.
இறுதியில், மிக முக்கியமான சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது பொதுமக்களின் கருத்துக்களில் இருந்தும் நேரக் கூடும். நிபுணர்களின் எச்சரிக்கைகளை புறக்கணித்தல், அரசியல் தாமதம் மற்றும் மனித ஆரோக்கியம் மற்றும் இயற்கை நிலப்பரப்புகளை பொருளாதாரத்திற்காக தியாகம் செய்வதன் கொடிய விளைவுகளை இந்த தொற்றுநோய் நிரூபித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் படி, புதிய தொற்று நோய்களில், 75% விலங்குகளிடமிருந்து வருகின்றன.  கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, அவை வனவிலங்கு கடத்தல் மற்றும் காடழிப்பு மூலம் மனிதர்களுக்கு மிக விரைவாகச் தோற்றி, பின்னர் விமானப் பயணம் மற்றும் பயணக் கப்பல் சுற்றுலா என உலகம் முழுவதும் பரவுகின்றன. காட்டு விலங்குகளுக்கான உலகின் மிகப்பெரிய சந்தையான சீனா – நேரடி வனவிலங்குகள் வளர்ப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றை தடை செய்வதன் மூலம் இதை அங்கீகரித்ததாகத் தெரிகிறது. “ஈரமான சந்தைகள்” மீதான உலகளாவிய தடைக்கான அழைப்புகள் அதிகரித்து வருகின்றன.
மாசுபாடு நோய்க்கான நமது எதிர்ப்பைக் குறைக்கிறது என்பதையும் தொற்றுநோய் காட்டுகிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூற்றுப்படி, போக்குவரத்து புகையின் அதிக வெளிப்பாடு என்பது பலவீனமான நுரையீரல் என்று பொருள். இவர்கள் கோவிட் -19 தொரு ஏற்படுமானால், இறப்பு நிச்சயம். ஐ.நா.வின் சுற்றுச்சூழல் தலைவரான இங்கர் ஆண்டர்சன் கூறியது போல், இந்த பூமியை  புறக்கணித்தால், அது நம்முடைய சொந்த நல்வாழ்வை ஆபத்தில் ஆழ்த்துவதாக இயற்கை நமக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளது. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, விண்வெளியில் இருந்து மட்டுமல்ல, உலகமே  வித்தியாசமாகத் தெரிகிறது. சிந்திக்க முடியாதது எல்லாம் தற்போது சிந்திக்கத்தக்கதாக மாறியுள்ளது. சுதந்திரமான அரசாங்கங்கள் என்றுக் கூறிக் கொண்டவர்கள், போர்க்கால நெருக்கடியைவிட மோசமான முடகுதலை மேற்கொண்டுள்ளன. சிக்கன பழமைவாதிகள் சுகாதார மற்றும் அவசர செலவினங்களுக்காக டிரில்லியன் கணக்கான டாலர்களை அனுமதிக்கின்றனர். மிக முக்கியமாக, அரசியல் கவனம் தனிப்பட்ட நுகர்வுகளிலிருந்து கூட்டு நல்வாழ்வுக்கு மாறியுள்ளது. இந்த 100 நாட்கள் மாற்றம் நமது சிந்தமையையே விதத்தை மாற்றிவிட்டன. அரசாங்கங்கள் மீது அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டால், இயல்பானது மற்றும் ஆரோக்கியமாது என்ற உணர்வோடு இல்லாமல், உலகம் வழக்கம் போல் நீடித்த வணிக பாதைக்குச் செல்லும். இறுதியில், இந்த தொற்றுநோய் சுற்றுச்சூழலுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்பது வைரஸைப் பொறுத்தது அல்ல, ஆனால் மனிதநேயத்தைப் பொறுத்தது.
தமிழில்: லயா