ழகு என்றால் மயங்காத பெண்கள் உண்டோ.! செயற்கை அழகு கிரீம்கள் முகத்தில் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இயற்கை முறையில் அழகை எப்படி பாதுகாப்பது என்பதைப் பார்க்கலாம்.

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில்  தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வந்துவிடும்.

 

சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்க  கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால் சருமம் அழகாகவும்,  பளபளப்பாகவும் இருக்கும்.

 

தலை முடி நன்கு வளர வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளிக்க வேண்டும், வாரம் ஒரு முறை இவ்வாறு  செய்துவந்தால் நல்ல பலன் கொடுக்கும்.

 

சருமம் நிறம் அதிகரிக்க ஆப்பிள் விழுது இரண்டு டீஸ்பூன், பால்பவுடர் அரை டீஸ்பூன், பார்லி பவுடர் அரை டீஸ்பூன் மூன்றையும் செர்த்து கலந்து முகம்,கழுத்து,கை, வெளியில் தெரியும் பாகம் முழுவதும் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவினால் தோலின் நிறம் மாறி அழகைக்கூட்டும்.

 

சோர்வான கண்கள் பிரகாசமாக இருக்க இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவ வேண்டும்.இவ்வாறு  செய்வதால் சோர்வு நீங்கி கண் பிரகாசமாக இருக்கும்.

 

கருவளையம் நீங்க ஆரஞ்சு  பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் காணாமல் போகும்.

மருதாணி நன்கு சிவக்க மருதாணி போடும் முன் கையில் எலுமிச்சை பழ சாறு தடவி உலர விட்டு பிறகு போட்டால் மருதாணி  நன்கு சிவப்பாகப்பிடிக்கும்.