ரஷ்யாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்துகொண்ட கூட்டம் மாஸ்கோவில் நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்றுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் செர்ஜி ஷோய்குவுடன் இருநாட்டு உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.

தோவல் – ஷோய்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம், “இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்று திரும்பிய நிலையில் தற்போது ரஷ்யா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் மோடியின் உக்ரைன் பயணத்தின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகளின் தலையீடு அவசியம் என்பதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறிய நிலையில் மோடியின் உக்ரைன் பயணம் இருநாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை தனிக்குமா என்ற ரீதியில் பேச்சுவார்த்தை இருந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மாத இறுதியில் அமெரிக்காவில் நடைபெற உள்ள க்வாட் மாநாட்டிலும் அடுத்த மாதம் ரஷ்யாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டிலும் இந்தியா கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி பச்சைக்கொடி… உக்ரைன் – ரஷ்யா இடையிலான விரிசலை பாண்டு போட்டு ஒட்டும் முயற்சி… அஜித் தோவல் மாஸ்கோ பயணம்…