டெல்லி

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக தேசிய பாதுகப்பு ஆலோசனைக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது/

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடத்திய கோர தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இன்று முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகளான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி இருந்தது. அதன்

மத்திய அரசு தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவுக்கு புதிய அதிகாரிகளை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு தலைவராக முன்னாள் ‘ரா’ தலைவர் அலோக் ஜோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராணுவ சேவைகளில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளான முன்னாள் மேற்கு விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் பி.எம். சின்ஹா, முன்னாள் தெற்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங் மற்றும் ரியர் அட்மிரல் மோன்டி கன்னா ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இந்திய காவல் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இரண்டு ராஜீவ் ரஞ்சன் வர்மா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரும், முன்னாள் இந்திய வெளியுறவு சேவை (IFS) தூதர் பி. வெங்கடேஷ் வர்மா ஆகியோரும் 7 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

 

[youtube-feed feed=1]