புது தில்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஞாயிறன்று ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிப் போட்டிகள் நடைப்பெற்றன.
சிறந்த இந்திய ஓட்டப்பந்தய வீரரின் சாதனை முறியடித்த ஓட்டம் மின்வெட்டு காரணமாக பயனற்றதானது.
தகுதிப் போட்டியின் போது ஏற்பட்ட மின் வெட்டுக்குப் பின்னர் சாதனையை முறியடித்த இரண்டு இந்திய முன்னணி ஓட்டப் பந்தய வீரர்களின் ஓட்டம் அதிகாரப்பூர்வமாக ஒத்துக்கொள்ளப் படாமல் அவர்களின் ஒலிம்பிக் நம்பிக்கையும் கனவும் சிதைந்தன.
ஞாயிறன்று நடந்த இந்திய கிராண்ட் பிரிக்ஸ்ஸில் மின் செயலிழப்பால், மின்னணு மூலம் செயல்படும் டிஜிட்டல் டைமர்கள் மற்றும் காற்று அளவைகள் வேலை செய்யாததால், அமைப்பாளர்கள் நேரத்தை பதிவு செய்ய கை கடிகாரங்களைப் பயன்படுத்திய கேலிக்கூத்து காட்சிகள் அறங்கேறியது.
புது தில்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்வில் நான்கு புதிய தேசிய சாதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களது மகிழ்ச்சி குறுகிய காலத்திற்கு மட்டுமே நிலைத்தது ஏனெனில் அவர்களது சாதனை நேரம் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அவர்கள் இந்த வாரம் மற்றொரு நிகழ்வில் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் உறுதி செய்யப்பட்டது.
அமியா குமார் மல்லிக் 100 மீட்டர் தூரத்தை 10.09 விநாடிகளில் ஓடியது, 0.21 நொடிகளில் தேசிய சாதனையை நொறுக்கியது மட்டுமல்லாமல் ஒலிம்பிக் தகுதி குறியான 10.16 விநாடிகளை விட விரைவாகவும் இருந்தது.
ஸ்ரபானி நந்தவாரே பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டபந்தயத்தை 11.32 விநாடிகளில் வெற்றி பெற்று, 16 வருட தேசிய சாதனையான 11.38 வினாடிகளை முறியடித்தது மட்டுமல்லாமல் ரியோ தகுதி நேரமான 11.23 வினாடிகளை விடவும் வேகமாக ஓடினார். “இது மிகவும் ஏமாற்றமான விஷயம் தான். நான் விரைவாக குறுகிய நேரத்தில் ஓடினேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது ஏனெனில் மின்னணு நேரம்காட்டி இயந்திரம் வேலை செய்யவில்லை” என்று மல்லிக் இந்தியன் எக்ஸ்பிரஸ் மூலமாக கூறியதாக சொல்லப்படுகிறது.
1982 ஆசிய விளையாட்டுக்காக கட்டப்பட்டு 2010 காமன்வெல்த் விளையாட்டடின் முக்கிய இடமான இந்த அரங்கம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது ஆனால் திங்களன்று கருத்துகளைத் தெரிவிக்க உடனடியாக தயாராக இல்லை. ஆனால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த இந்திய தடகள கூட்டமைப்பு அதிகாரி, டிரான்ஸ்ஃபார்மரில் தீ பிடித்ததால் தான் மின் வெட்டு ஏற்பட்டதாக அரங்க நிர்வாகிகள் குற்றம் கூறியதாக தெரிவித்தார்.
“அங்கு ஜெனரேட்டர்கள் இருந்தன ஆனாலும் அவர்கள் எந்த உதவியும் இல்லை என்றனர்” என்று ஒரு அதிகாரி கூறினார். தில்லி தடகள சங்கத்தின் தலைவர், சன்னி ஜோசுவா, 30 வருடங்களில் இது போல சம்பவம் நடப்பது இது தான் முதல் தடவை. ஏப்ரல் 28-30 வரை நடக்கவிருக்கும் ஃபெடரேஷன் கோப்பையின் போது விளையாட்டு வீரர்களுக்கு மற்றொரு வாய்ப்பு அமையும்” என்று கூறினார்.