டெல்லி: தலைநகர் டெல்லி, குஜராத் மற்றும் உ.பியில் உள்ள ஆய்த சப்ளையர் ஒருவரது வீடு உள்பட  பல  மாநிலங்களைச் சேர்ந்த 72 மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள ரவுடிகளையும், அவர்களுடன் தொடர்பில் உள்ள பயங்கரவாத கும்பலை செயல்களை முடியறித்துள்ள என்ஐஏ, அவர்களை  பிடிக்கும் முயற்சியில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நாடு முழுவதும் 72 இடங்களில் குண்டர் சட்டத்தில் சோதனை நடத்தி வருகிறது. உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி-என்சிஆர் ஆகிய இடங்களில் தற்போது சோதனைகள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே, பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருந்து பல்வேறு சட்டவிரோத நடவடிடக்கைகளை மேற்கொண்டு வந்த ரவுடி கும்பலைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் நீரஜ் பவானா கும்பலை சேர்ந்த பலரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபரில், பயங்கரவாதிகள், குண்டர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையேயான தொடர்பைக் குறிவைத்து ஐந்து மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. பயங்கரவாத வலையமைப்புகள் மற்றும் அவற்றின் நிதியுதவி மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவு ஆகியவற்றைத் தொடர்ந்து அகற்றும் என்று என்ஐஏ கூறியிருந்தார்.

அமைதத்தொடர்ந்து,  பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் கேங்க்ஸ்டர் நெக்ஸஸ் குறித்த உள்ளீட்டை சேகரித்துள்ளது மற்றும் குண்டர்கள் வழக்கில் இதுவரை நான்கு சுற்று சோதனை களை நடத்தியுள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன. பல குண்டர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த கும்பலிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் என்ஐஏ விசாரித்து வரும் நிலையில், அதில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சோதனைகள் தொடங்கப்பட்டதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரபிரதேச மாநிலம், பிலிபிட்டில் ஆயுதம் சப்ளையர் ஒருவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் இருந்து சப்ளை செய்யப்பட்ட இந்த ஆயுதங்கள் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பஞ்சாப், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 72க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

போதைப்பொருள், கள்ளநோட்டு கடத்தல்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ரவுடிகளையும், அவர்களது சிண்டிகேட்டையும் பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சத்தீஷ்காரில் நிலக்கரி கொண்டுவர மாமூல் வசூலித்ததாக கூறப்படும் வழக்கில், அங்குள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.