டில்லி

கிரிக்கெட் பயிற்சியாளர்களின் பதவியின் காலம் பற்றி நிர்ணயிக்க உச்சநீதிமன்றம் ஒரு கமிட்டி அமைத்தது. அந்த கமிட்டி பயிற்சியாளர்களுக்கு இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தின் பேரில் பதவி அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இது அனைத்துக் பயிற்சியாளர்களையும் கட்டுப்படுத்தும்.

முன்னதாக லோதா கமிட்டியில் குறைந்தது 12 மாதங்கள் ஒப்பந்தம் போட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், 10 மாதங்கள் தேசிய அணிகளிலும் 2 மாதங்கல் ஐ பி எல் அணிகளிலும் பணி ஆற்ற முடியாது.

உதாரணத்துக்கு ராகுல் டிராவிட் ஒப்பந்தக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்ப்பட்டால் அவரால் டில்லி டேர் டெவில்ஸ் குழுவில் பணியாற்ற முடியாது.

இந்தியன் ஏ மற்றும் யு-19 தேர்வுகளுக்கும் இது பொருந்தும்.

மூத்த ஆட்டக்காரர்கள் இணந்து அவர்கள் மூலமாக ஒரு தலைமை பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

தற்போது கேப்டன் கோஹ்லி, மற்றும் பயிற்சியாளர் கும்ப்ளே இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக கும்ப்ளேயின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா என ஒரு கேள்வி எழுந்துள்ளது.

தற்போது, அவர்களிடையே உள்ள கருத்து வேற்றுமை மறைந்தாலும், மற்ற சச்சின், லட்சுமன், கங்குலி போன்ற மூத்த கிரிக்கெட் வீரர்களின் மூலமே கும்ப்ளே வை மீண்டும் தேர்வு செய்ய இயலும்