சிறுவனுக்கு ’’ஜாமீன்’’ கொடுத்த தேசியகீதம்..

பீகார் மாநிலம் பீகார் ஷரீப் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்தபோது, 17 வயது சிறுவன் ஒருவன் பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமீத்ஷா, பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ஆகியோருக்கு எதிராக முழக்கமிட்டார்.

இந்த முழக்கம், சமூக வலைத் தளங்களில் வைரலானது.

இதையடுத்து, போலீசார் தாமாக முன் வந்து அந்த சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த சிறுவன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நாலந்தாவில் உள்ள சிறுவர் நீதி வாரிய நீதிபதி மிஸ்ரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

’’ தேசிய கீதத்தைத் தவறு இல்லாமல் சரியாகப் பாடினால் ஜாமீன் வழங்குகிறேன்’’ என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.

அந்த சிறுவனும், தேசிய கீதத்தைச் சரியாகப் பாடினார். அவரை பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.