சென்னை:
ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, அவர்கள் செலவிலேயே “Anti body test” எடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் இணை ஆணையர் (சுகாதாரம்) கூடுதல் பொது சுகாதார அலுவலர்கள், தலைமை மருத்துவ அலுவலர்கள், மண்டல நல அலுவலர்கள் மற்றும் மண்டல மருத்துவ அலுவலர்கள், தலைமை பூச்சியியல் தடுப்பு அதிகாரி, அனைத்து மண்டல பூச்சியியல் வல்லுனர்களுடன் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள, அம்மா மாளிகை அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாவது:- அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் தங்களது பணிகளை திறம்பட மேற்கொண்டு வருகின்றனர், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு தீவிரமாக கண்காணிப்பது குறித்து கூடுதல் பொது சுகாதார அலுவலர்கள், தலைமை மருத்துவ அலுவலர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள் ஆகியோருக்கு கீழ்கண்ட அறிவுரைகளை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, அவர்கள் செலவிலேயே “Anti body test” எடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, ரிப்பன் மாளிகையில் நடந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனான ஆய்வு கூட்டத்தில் பிரகாஷ் தெரிவித்தார்.