விளார்
சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல் விளார் கிராமத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே அடக்கம் செய்யப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் நேற்று அதிகாலை 1.35 மணிக்கு மறைந்தார். அவரது உடல் நேற்று சென்னை பெசண்ட் நகர் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பல அரசியல் கட்சி தலைவர்களும், பிரமுகர்களும், பொதுமக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதன் பிறகு நடராஜனின் உடல் அவர் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளாருக்கு எடுத்து வரப்பட்டது. அங்கும் அவருக்கு பல கட்சித்தலைவர்கள், பிரமுகர்கள், உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் அஞ்வலி செலுத்தினர்.
இன்று மாலை நடராஜனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட து. விளார் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தின் எதிரே அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.