வாஷிங்டன்:

வின்வெளியில் உள்ள நுண்ணுயிர்க்கு அப்துல் கலாம் பெயரை நாசா சூட்டியுள்ளது.

நாசாவில் ஜெட் ப்ரோபல்சன் ஆய்வகம் (ஜேபிஎல்) தனது கிரக பயணத்தின் போது புதிய நுண்ணுயிர்  சர்வதேச வின்வெளி ஆய்வகத்தில் கண்டுபிடித்துள்ளது.

இந்த நுண்ணுயிர் பூமியில் பார்க்க முடியாது. இந்த பேக்டரியாவுக்கு மறைந்த விஞ்ஞாணியும், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் பெயரை சூட்டி நாசா கவுரவம் வழங்கியுள்ளது. சோலிபேக்கிலஸ் கலாமி என்று அந்த நுண்ணுயிர்க்கு பெயரிடப்பட்டுள்ளது.

1963ம் ஆண்டிற்கு முன் நாசாவில் அப்துல்கலாம் பயிற்சி பெற்றார். அதன் பிறகு தான் அவர் இந்தியா வந்து கேரளா தும்பா கிராமத்தில் இருந்து இந்தியாவில் முதல் ராக்கெட் ஏவும் வசதியை நிறுவினார்.

‘‘இந்த நுண்ணுயிர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல் பல பேக்டீரியாக்கள் வின்வெளில் கண்டுபிடிக்கப்படும். ஆனால், அவை பூமியிலும் இருக்க கூடியவை. இந்த நுண்ணுயிர் பூமியில் பார்க்க முடியாது.

வின்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்கு அப்துல்கலாமின் பங்களிப்பு பிரமிக்கத்தக்கதாகும். அதனால் அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது’’ என்று ஜேபிஎல் மூத்த ஆராய்ச்சியாளர் கஸ்தூரி வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.