வாஷிங்டன்: செவ்வாய் மற்றும் நிலவில், தண்ணீரை கண்டெடுப்பதற்கு உதவும் பொருட்டு, மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது நாசா.

பல்கலைக்கழக நிலையிலான பொறியியல் மாணாக்கர்களிடமிருந்து இந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியுள்ள மாணாக்கர்கள், செவ்வாய் மற்றும் நிலவிலிருந்து வடிவமைப்பை மேற்கொண்டு, வன்பொருளை() கட்டமைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

விண்வெளியைப் பொறுத்தவரை, நீரேற்றம், தாவர வளர்ச்சி, ராக்கெட் புரபெல்லன்ட்டுகள் ஆகியவற்றுக்கு நீர் அவசியமான ஒன்றாகிறது. ஆனால், இதற்காக பூமியிலிருந்து நீரைக் கொண்டு செல்வது மிகவும் செலவு வாய்ந்த ஒன்று.

இதன்பொருட்டு, முன்மொழிவு வடிவமைப்புகளை மாணாக்கர்களிடமிருந்து எதிர்பார்க்கிறது நாசா. மொத்தம் 10 குழுக்கள் தேர்வுசெய்யப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும் இந்திய மதிப்பில் தலா ரூ.7.5 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் அடுத்த 6 மாதங்களில் தங்கள் சிஸ்டத்தை கட்டமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.