ஜெருசலேம்:
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப் பயணமாக ஜூலை 3ம் தேதி இஸ்ரேல் செல்கிறார். அங்கு கிங் டேவிட் ஓட்டலில் அவர் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த ஓட்டலில் தான் தங்கினார்.
அவருக்கு எந்த அறை ஒதுக்கப்பட்டதோ, அதே அறை தான் மோடிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு டிரம்ப் படுத்திருந்த படுக்கை தான் மோடிக்கும் ஒதுக்கப்படுகிறது என்று ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட் டுள்ளது.
ஆனால், டிரம்புக்கு கடைபிடித்த கெடுபிடிகள் இவருக்கு இல்லை. டிரம்ப் வருகையின் போது அந்த ஓட்டலில் தங்கியிருந்த இதர பயணிகள் அனைவரும் காலி செய்யப்பட்டனர். ஆனால் மோடிக்கு மாடியில் ஒரு தளத்தில் இருந்த பயணிகள் மட்டுமே காலி செய்யப்படுகின்றனர். அதோடு வாகன நிறுத்துமிடமும் காலி செய்யப்படுகிறது.
டிரம்புக்கு ஆடம்பர விழாவுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்ப டுகிறது. ஓட்டலின் தலைவர் மைக்கேல் பெடர்மேன் வரவேற்பு அளிக்கிறார். இவர் டிபன்ஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தலைவரும் கூட. இந்த நிறுவனம் இந்தியாவுடன் வர்த்தக உறவை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் ஒரு தலைசிறந்த பிரதமர் என்பதால் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது என அங்குள்ள நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கர்டிஸி..பைனான்சியல் எக்ஸ்பிரஸ்