டெல்லி:

2032ம் ஆண்டிற்கு நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களையும் மின்சார வாகனங்களாக மாற்ற பிரதமர் மோடி முடிவெடுத்து செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு ஏற்ப 2018ம் ஆண்டு இறுதியில் பேட்டரி சார்ஜ் செய்யும் நிலையங்களை திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் கிடைக்கும் வரி வருவாயை கொண்டு மின்சார வாகனங்களுக்கு பேட்டரி சார்ஜ் செய்யும் நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்கான வரைவு திட்டத்ததை நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

90 பக்கங்கள் கொண்ட இந்த பரிந்துர¬யில் நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களையும் வரும் 2032ம் ஆண்டிற்குள் மின்சார வாகனங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வார காலத்தில் இது ம க்கள் மத்தியில் அறிவிக்கப்படவுள்ளது. இதற்கென்று புதிய வாகன கொள்கையை மத்திய அரசு வடிவமை க்கவும், தொழிற்சாலை ஆதாரங்களையும் ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதை படிவ எரிபொருள் மற்றும் மின்சாரம் மூலம் இயக்கப்படும் தற்போதை வாகன கொள்கையை முற்றிலும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இது சில வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு கவலையை ஏற்ப டுத்தியுள்ளது. இதை ஏற்படுத்த இந்தியாவிடம் போதுமான வளம் உள்நாட்டிலும், உலகளவிலும் உள்ளது.
பேட்டரி சார்ஜ் செய்யும் வாகனங்கள் தயாரிக்க கடந்த ஆண்டு சீனாவில் ஊக்குவிப்பு அறிவிப்புகள் வெளியானது. இதைத் தொடர்ந்தே இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவின் மூலம் 2030ம் ஆண்டில் எரிபொருள் இறக்குமதியை 50 சதவீதம் குறையும்.

இந்த திட்டம் மூலம் பேட்டரிகளின் அதிக விலை காரணமாக கார்களின் விலை உயரும். சார்ஜ் நிலையங்கள் தட்டுப்பாடு மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளை கார் நிறுவனங்கள் ஏற்படுத்துதல், தொழில்நுட்ப ரீதியாக அதிக முதலீடு செய்ய நேரிடும். இது குறித்து கார் தயாரிப்பு நிறுவனங்களுடனும் கலந்து பேச வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மாருதி சுசூகி நிறுவனம் குறைந்த அளவு மின்சார சக்தியை பயன்படுத்தி, கலப்பு எரிபொருள் திட்டத்தில் முதலீடு செய்துள்ளது. இதேபோல் டொயோட்டா மோட்டார்ஸ் நிறுவனமும் கலப்பு எரிபொருள் சொகுசு வாகனங்களை தயாரித்துள்ளது. இந்தியாவில் மகிந்திரா நிறுவனம் மட்டுமே மின்சார வாகங்களை தயாரிக்கும் நிறுவனமாகும்.

அமெரிக்காவின் ராக்கி மவுன்டெயின் இஸ்டிடியூட்டுடன் இணைந்து நிதிஆயோக் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது. 15 ஆண்டுகள் கொண்ட இந்த திட்டம் 3 பிரிவுகளாக இந்த ஆண்டு முதல் தொடங்கப்ப டுகிறது. சீனாவில் லாட்டரி மற்றும் அன்பளிப்பு மூலம் மின்சார வாகனங்களை வழங்கி ஊக்குவிப்பதோடு, பழைய வாகன பதிவுகளை வரையறுக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த அம்சமும் நம் நாட்டின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

இந்த மாற்றத்தை ஏற்படுத்த மொத்தமாக மின்சார வாகனங்களை கொள்முதல் செய்யவும், 2 மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு பிரத்யேக பேட்டரிகளை தயாரிப்பதன் மூலம் அடக்க விலையை குறை க்கலாம். அதோடு சார்ஜிங் கார்களுக்கும் ஏற்க கூடிய விலையை நிர்ணயம் செய்யலாம் என்று அந்த அறி க்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கான 250 மெகாவாட் பேட்டரி தயாரிக்கும் நிலையம் அமைக்க 2018ம் ஆண்டு இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். இது 2020ம் ஆண்டில் ஒரு ஜிகா வாட்டாக உயர்த்த வேண்டும் என்றும், பேட்டரி வாகனங்களுக்கு மானியம் அளித்து 2025ம் ஆண்டிற்குள் தற்போதுள்ள கலப்பு எரிபொருள் வாகன விலைக்கு நிகராக கொண்டு வரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார வாகனம் வாங்குவோருக்கு குறைந்த வட்டியில் கடன், மின்சார வாடகை கார்களுக்கு குறைவான வரி, இத்தகைய புதிய கார்களுக்கு குறைவான வரி விதிக்கப்பட வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளை நிதிஆயோக் தெரிவித்துள்ளது.