உலகின் மிக லேசான எடை கொண்ட மொபைலான நானோபோன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ரூ. 3,490 மட்டுமே!
எலாரி என்ற நிறுவனம் தயாரித்துள்ள எலாரி நானோபோன் சி என்ற மொபைல்தான் உலகிலேயே மிகவும் எடை குறைவானது. இந்த மொபைல் நேற்று (வியாழன்) முதல் இந்தியாவிலும் விற்பனைக்கு வந்துவிட்டது.
இந்த மொபைலின் எடை வெறும் 30 கிராம்தான். இதில் ப்ளூடூத், மியூசிக் ப்ளேயர், எஃப்.எம். ரேடியோ போன்ற போன்ற வசதிகள் இருக்கின்றன. இதன் பேட்டரி 4 நாட்கள் நீடிக்கும் திறன் கொண்டது. 32MB போன் மெமரி உள்ளது. மெமரி கார்டு மூலம் மேலும் 32 எம்.பி. வரை மெமரியை விரிவு செய்துகொள்ளலாம்.
இந்த போனில், மேஜிக் வாய்ஸ் வசதி மூலம் நண்பர்களிடம் குரலை மாற்றி பேசி ஏமாற்றி விளையாடவும் முடியும்.
ப்ளூடூத் மூலம் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களுடன் இணைக்கவும் முடியும். ரோஸ் கோல்ட், கருப்பு மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கிறது.
நோனோபோன் சி மொபைல் ரூ.3490க்கு எர்ஹா இணையதளம் மூலம் விற்கப்படுகிறது. தற்போது லட்சம் ரூபாய்க்கும் மேல்கூட பல மாடல் மொபைல்கள் விற்கப்படும் நிலையில் இது மலிவான விலைதான் என்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.