திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர் நடிகை நமீதா மற்றும் அவரது கணவர் வீரேந்திர சவுத்ரி.
இருவரும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று மூலவர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
ரெங்கநாயக்கர் மண்டபத்தில் அவர்களுக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம் வழங்கினார் அர்ச்சகர்கள்.
கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகை நமீதா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஏழுமலையானை தரிசனம் செய்தது சந்தோஷமாக இருந்தது. இதற்கு முன்பு வந்தபோது தரிசன ஏற்பாடுகள் நன்றாக இருந்தது. ஆனால் தற்போது கோயிலில் தரிசன ஏற்பாடுகள் சரியில்லை’’ என்றார்.