அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட வீரர் – வீராங்கனைகள் யார்?

Must read


புதுடெல்லி: இந்தியக் கிரிக்கெட் வீராங்கனைகள் ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா மற்றும் கால்பந்து வீராங்கனை பாலாதேவி, வீரர் சந்தேஷ் ஜிங்கன் ஆகியோரின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
அர்ஜுனா விருது என்பது, விளையாட்டுத் துறையில் ஜொலிப்பவர்களுக்காக ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்படுவதாகும். இந்த விருதுக்கான பரிந்துரைப்புப் பட்டியல் ஜுன் 3ம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும்.
இந்நிலையில், பிசிசிஐ சார்பில் ஷிகா பாண்டே மற்றும் தீப்தி ஷர்மா பெயர்களும் சிரிக்கெட் வீராங்கனைகள் பெயரும், அகில இந்திய கால்பந்து சங்கம் சார்பில் பாலா தேவி மற்றும் சந்தேஷ் ஜிங்கன் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இதில் மணிப்பூரைச் சேர்ந்த 30 வயதான பாலாதேவி, ஸ்காட்லாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் தொடரில், ரேஞ்சர்ஸ் எஃப்சி அணிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றவர். இவர், கொரோனா விழிப்புணர்வு வீடியோ பிரச்சாரத்திலும் பங்க‍ேற்றவர்.
 

More articles

Latest article