“நீங்கள் வாக்களிக்க செல்லும் முன்னர் உங்கள் வீட்டில் இருக்கும் கேஸ் சிலிண்டரை வணங்கி விட்டு வாக்களியுங்கள்” என்று 2013 ஆம் ஆண்டு தேர்தலின் போது மோடி பேசினார்.
சிலிண்டர் விலை 400 ரூபாயாக இருந்தபோது மோடி இவ்வாறு பேசிய நிலையில் தற்போது வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1118 ஆக உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சமையல் எரிவாயு விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று மாலை கேஸ் சிலிண்டருக்கு பூஜை செய்து வழிபட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.