சென்னை: நாமக்கல் கிட்னி திருட்டுக்கு துணைபோன தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லுஹரி மருத்துவமனை மற்றும் திரச்ச, சிதார் மருத்துவமனை அறுவை சிகிச்சை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
நாமக்கல் மாவட்த்தில் நடைபெற்ற சிறுநீரக திருட்டு விவகாரத்தில், திருச்சி மற்றும் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சியில் உள்ள சிதார் மருத்துவமனை என இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

நாமக்கல் பகுதியில் வசதித்து வரும் ஏழை நெசவு தொழிலாளர்களிடம் ஆசை வார்த்தை கூறி திருட்டுத்தனமாக கிட்னி விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த விவகாரத்தில், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய பிரபல இரு 2 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
சிறுநீரக விற்பனை விவகாரத்தில், பொதுமக்கள் நலன் கருதி பெரம்பலூர் மற்றும் திருச்சியை சேர்ந்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களிடம் வறுமையைக் காரணம்காட்டி, அவர்களின் கிட்னியை விற்பனை செய்ய வைப்பதாக வெளியான தகவல் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அவர்களுக்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, தனியார் மருத்துவமனைகளுக்கு ரகசியமாக அழைத்துச் சென்று கிட்னி விற்பனை செய்ய வைப்பதும் தெரியவந்தது.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுகாதார திட்ட இயக்குநர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டார். தற்போது, சிறுநீரகம் விற்றதாக வந்த செய்தியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கையை வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்த்தில் நடைபெற்ற சிறுநீரக திருட்டு விவகாரத்தில், திருச்சி மற்றும் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சியில் உள்ள சிதார் மருத்துவமனை என இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
