சென்னை: தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்ட ஏழை நெவு மக்களிடையே நடைபெற்று வந்த கிட்னி திருட்டு தொடர்பாக திமுக நிர்வாகி மற்றும் திமுக ஆதரவாளர்களின் மருத்துவமனைகள் மீது அண்ணாமலை பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.
கிட்னி திருட்டுக்கு புரோக்கராக செயல்பட்டு வந்த திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் தலைமறைவாகி உள்ளார். அவரை கைது செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது. கிட்னி திருட்டில் திமுகவினருக்கு சொந்தமான இரு மருத்துவமனைகள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சர் இனியும் தாமதிக்காமல், உடனடியாக சிறப்புப் புலனாய்வு படை அமைத்து இந்தக் குற்றங்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறித் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, கிட்னி திருட்டு நடந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் நாட்டையே அதிர வைத்துள்ளன. இந்த குற்றச்சாட்டில் திமுக நிர்வாகி ஒருவர் தொடர்புபடுத்தப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன என முன்னாள் பாஜாக மாநில தலைவரான அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்தக் கிட்னி திருட்டு குறித்து செய்திகள் வெளியாகி ஐந்து நாட்கள் கடந்த பின்னரும், புரோக்கராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் இன்னும் கைது செய்யப்படவில்லை என எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
காவல்துறை தனிப்படை அமைத்துத் தேடி வருவதாகக் கூறி வரும் நிலையில், அந்த நபர் தனது வீட்டருகே இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
இதனைதொடர்ந்து தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை போன்ற பெரிய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சியினர் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றன.
திமுக அரசு தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது என்ற நம்பிக்கையே இத்தகைய குற்றச் செயல்களில் அவர்கள் தைரியமாக ஈடுபடக் காரணம் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழகக் காவல்துறை இதனை மீண்டும் மீண்டும் நிரூபிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
உடல் உறுப்பு திருட்டு என்பது உலக அளவில் கடும் தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும். ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு குறித்த செய்தி வெளிவந்து ஐந்து நாட்கள் ஆகியும், திமுக அரசு மெத்தனமாகச் செயல்படுவது, இந்தக் குற்றத்தில் திமுகவைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளுக்குத் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
திராவிட ஆனந்தன் தனி நபராக இதனைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்பதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனியும் தாமதிக்காமல், உடனடியாக சிறப்புப் புலனாய்வு படை அமைத்து இந்தக் குற்றங்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் எனவும், இதில் தொடர்புடைய நபர்கள், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் என அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கிட்னியை ரூ.6 லட்சத்திற்கு விற்றதாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவைத் தொடர்ந்து கலெக்டர் துர்காமூர்த்தி உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை அதிகாரிகள் பள்ளிபாளையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சந்தேகப்படும் ஈரோடு மற்றும் திருச்சி தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் வகையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழும் இந்த உத்தரவின் அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கல்லீரல் விற்பனை சம்பந்தமாக அதிகாரிகள் சமீபத்தில் மருத்துவமனையில் சோதனை நடத்தினர். அதன்பின் தொடர் விசாரணையின் அடிப்படையில் மருத்துவமனையின் செயல்பாடுகளைத் தற்காலிகமாகத் தடைசெய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாமக்கல்லில் நடந்த கிட்னி திருட்டு தொடர்பாக திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி கொடையாளிகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை இணை இயக்குநர்கள் விசாரணை மேற்கொள்ள உத்தரவு அளித்துள்ளது. நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம், தனிக்குழு அமைத்து விசாரணை மாவட்ட மருத்துவ இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளி பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கிட்னி பாளையம் என கோட் வேர்டு வைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறது. புரோக்கர் கும்பல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் அவர்களின் ஏழ்மையான பின்னணி கொண்டவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி அவர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
தொழிலாளர்களை சந்திக்கும் புரோக்கர்கள் அவர்களது சிறுநீரகங்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை பணம் தருவதாக கூறி ஒரு லட்சம் ரூபாய் வரை அட்வான்ஸ் கொடுக்கின்றனர். பின்பு அவர்களை கோவை, சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களது சிறுநீரகங்கள் எடுக்கப்படுகிறது. பின்பு அவை ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கு 50 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுவது தெரிய வந்திருக்கிறது.
இந்நிலையில் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் கிட்னி விற்பனை விவகாரத்தில், தனிக்குழு அமைத்து விசாரணை மாவட்ட மருத்துவ இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நாமக்கல்லில் நடந்த கிட்னி திருட்டு தொடர்பாக திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி கொடையாளிகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை இணை இயக்குநர்கள் விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.